எண்ணத்தை விட வேகமாக கரைந்ததென் நம்பிக்கை...
என் மேல் எனக்கிருந்த நம்பிக்கை.
கடிகார நேரத்தை நிறுத்த முயன்றேன் மாதங்களுக்கு முன்னால்.
மறந்திடத் துடிக்கும் அந்நிகழ்வுகளுக்குப் பின்னால்.
இனி காலம் முன் சென்று பயனில்லை அல்லவா?
கனா கண்டு கொண்டே இருக்கிறது மனம் இன்னும்,
அது கனியாது எனத் தெரிந்தும்.
பகுத்தறிவு அதை ஒதுக்கக் கூடப் பார்த்தது;
இறுதியில் ஒதுங்கியதோ என்னறிவே.
மண்ணுலகில் எதுவும் செய்ய மறுக்கிறேன். மன உலகிலும்.
வாழும் நாள் முழுதும் அடைந்து கிடப்பதென்ற முடிவில், நான்.
No comments:
Post a Comment